ஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக அமெரிக்க தம்பதியினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Cathy மற்றும் Ian என்னும் தம்பதி தங்களது ஐபோனை லெதர் சோஃபாவின் மீது சார்ஜ் செய்வதற்காக வைத்திருந்து விட்டு வெளியே சென்றனர்.

வீட்டுக்கு திரும்பும்போது வீட்டிலிருந்து கரும்புகை எழும்புவதைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்துபோனது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது ஐபோனே என தெரியவந்தது, தீயணைப்பு துறையினரும் தங்களது அறிக்கையில் அவ்வாறே குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து உதவி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்தும், இதுவரையில் எந்தவொரு உதவியும் செய்யவில்லை.

ஏற்கனவே தீ விபத்தால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து மீண்டு வர தங்கள் சொத்தை விற்பதை தவிர வேறு வழியில்லை என்றும் Cathy மற்றும் Ian தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்