சிரியா அகதிகளை அரவணைக்கும் கனேடிய அரசு

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை கனேடிய அரசு மீண்டும் அரவணைக்க முடிவு செய்துள்ளது.

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அங்குள்ள பல லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, சிரியா அகதிகளை அரவணைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் கனேடிய அதிகாரிகள் களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோன்று சிரியா அகதிகளை வரவேற்ற கனேடிய பிரதமர், தாயகத்துக்கு வரவேற்கிறேன் என அவர்களை வரவேற்றது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 800-கும் அதிகமான மக்கள் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி போர் தீவிரமடைந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் அப்பாவி மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்