கனடாவின் சீரியல் கில்லரால் கொல்லப்பட்டதாக கருதப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் சீரியல் கில்லரான McArthur கொன்றதாக கருதப்படும் ஏழாவது நபரின் புகைப்படம் ஒன்று பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த சீரியல் கில்லரான McArthur இதுவரை ஆறு பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், தான் கொலை செய்தவர்களை தனது தோட்டத்தில் புதைத்து விடுவது அவரது வழக்கமாகும்.

இதுவரை ஆறு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏழாவதாக ஒருவரின் உடல் பாகங்கள் சிக்கின.

அவர் யார் என்று அடையாளம் காண்பது பொலிசாருக்கு கடினமான ஒன்றாக உள்ளதால், அவரது புகைப்படத்தை வெளியிட்டு அவரை அறிந்தவர்கள் யாராவது தகவல் கொடுக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு அவரைக் குறித்து தெரியப்படுத்த வசதியாக இருக்கும் என்பதற்காகவே இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்