பெற்ற மகள்களையே கௌரவக் கொலை செய்த தாய்: அதிர்ச்சி காரணம்

Report Print Athavan in கனடா
459Shares
459Shares
lankasrimarket.com

கனடாவில் தனது மூன்று மகள்களையும் கௌரவக் கொலை செய்த பெண்ணை நாடு கடத்தவும், நிரந்தர குடியுரிமையை பறிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வெளியேற்ற உத்தரவானது Tooba Yahya என்ற குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் கியூபெக் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தான் நடைமுறைப்படுத்தப்படும் என அவரது வழக்கறிஞர் Stephane Handfield செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கான உத்தரவை கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் நல வாரியம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சகோதரிகளான Zainab(19), Sahar (17) and Geeti (13) மற்றும் Yahya கணவரின் முதல் மனைவி ஹேனா(52) ஆகிய நான்கு பேரின் உடல்களும் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் கால்வாய் ஒன்றில் மூழ்கிய நிலையில் இருந்த காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலைகளில் Tooba Yahya கணவர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 2012ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரோலில் வெளி வரமுடியாதவாறு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மூன்று மகள்களும் குடும்ப கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், மீறியதால் தாம் கெளரவ கொலை செய்ததாக Tooba Yahya வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரான Tooba Yahya நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் Yahya தற்போது எந்த அந்தஸ்தும் இல்லாமல் கியூபெக் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்