மேகன் மெர்க்கலின் கனடா வீடு விற்பனை: விலை என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasri.com

இளவரசர் ஹரியுடன் பழகும் நாட்களில் மேகன் மெர்க்கல் வசித்துவந்த Torontoவிலுள்ள வீடு ஒன்றரை மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

Suits தொடரில் நடித்து வந்த Suits மேகன் மெர்க்கல் நவம்பர் 27 ஆம் திகதி இளவரசர் ஹரியுடன் நிச்சயம் ஆவதற்குமுன் இரண்டு ஆண்டுகள் இந்த வீட்டில் வசித்துவந்ததாகவும் பின்னர் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்குமுன் அவர் Bathurst பகுதியில் பிரபல பத்திரிகையின் ஃபேஷன் இயக்குநரான Elizabeth Cabral மற்றும் அவரது கணவரான Kevin O'Neillக்கு சொந்தமான ஒரு இரண்டு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

Yarmouth Road பகுதியிலுள்ள மேகன் மெர்க்கல் வசித்துவந்த வீடு இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் இரண்டு கார்களை நிறுத்த வசதியுள்ள மார்பிள் பதித்த தரையைக் கொண்ட வீடாகும்.

யார் இந்த வீட்டை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்