பிரசவத்தில் உயிரிழந்த பெண்: இரட்டை பெண் குழந்தைகளுடன் தவிக்கும் தந்தை

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் இளம் பெண்ணொருவர் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீ லியூ என்ற பெண்ணுக்கு ரிச்மண்ட் மருத்துவமனையில் கடந்த மாதம் 8-ஆம் திகதி பிரசவம் நடந்த நிலையில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் சிகிச்சையில் இருக்கும் போதே லியூவின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வந்த லியூவின் இரட்டை குழந்தைகளும் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையடுத்து மனைவியை பறிகொடுத்த கனத்த இதயத்தோடு, இரட்டை குழந்தைகளின் தந்தை விக்டர் யூ நேற்று குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார்.

விக்டர் கூறுகையில், லியூ இறந்தவுடன் மிகவும் உடைந்து போய் விட்டேன், உடன் இருந்தவர்களின் ஆதரவால் தான் வலிமையாக முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் ஓன்லைன் மூலம் இரட்டை குழந்தைகளுக்காக உறவினர்கள் நிதி வசூலித்து வருகிறார்கள்.

லியூ இறந்த ஒரு வாரத்துக்குள்ளேயே $80,000 நிதி வசூலாகியுள்ள நிலையில் $500,000 அளவுக்கு வசூல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்