டிரம்ப் இப்படிப்பட்டவர்தான், கனடியர்கள் அதிரடி கருத்து

Report Print Balamanuvelan in கனடா
223Shares
223Shares
lankasrimarket.com

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் 62%பேர் அவர் ஒரு பொய்யர் என்று எண்ணுகின்றனர்.

Quebecஇல் G7 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் Angus Reid என்னும் அமைப்பு G7 தலைவர்கள் குறித்து மக்களின் கருத்தை அறியும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் அமெரிக்க அதிபர் டிரம்பை ஏறக்குறைய முக்கால் வாசி கனடியர்கள் திமிர் பிடித்தவர் என எண்ணுவதாகத் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி அவர் வம்புக்கிழுக்கும் குணமுடையவர், நேர்மையற்றவர் மற்றும் கறை படிந்த கைகளை உடையவர் என்றும் கருதுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கனடா நாட்டவர்கள் தங்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் குறித்தும் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 31 சதவிகித கனடியர்கள் ட்ரூடோவை வலிமையற்றவர் என்றும், 28 சதவிகிதம்பேர் அவர் திமிர் பிடித்தவர் என்றும், 27 சதவிகிதம்பேர் அவர் ஒரு குழப்பவாதி என்றும் கருதுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கனடியர்கள் மற்ற தலைவர்களையும் அவ்வாறே பார்ப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ள நிலையில் சில தலைவர்களைப் பற்றி பல கனடியர்களுக்கு தெரியவேயில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்