பிஸ்கட் சாப்பிடும்போது கம்பளிப் பூச்சியை கடித்த எட்டு மாத குழந்தை

Report Print Balamanuvelan in கனடா
124Shares
124Shares
lankasrimarket.com

கனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டது.

Kenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த அதன் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை பரிசோதித்தபோது குழந்தையின் வாயில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைக் கண்டார்.

என்ன செய்தும் குழந்தை அழுவதை நிறுத்தாமல் இருக்கவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் அவர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான் அவள் ஒரு கம்பளிப்பூச்சியைக் கடித்திருப்பதும் அவளது வாயில் கம்பளிப்பூச்சியின் முடி, கால்கள் ஆகியவை ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றிய மருத்துவர்கள் ஒரு இரவு முழுவதும் அவளை மருத்துவமனையில் வைத்து கவனித்தனர்.

கம்பளிப்பூச்சி எப்படி குழந்தையின் வாய்க்குள் போனது என்பது தெரியாவிட்டாலும் தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருப்பதாக அவளது தாயார் தெரிவித்தார்.

அதற்குப் பின் ஃபேஸ்புக்கில் கம்பளிப்பூச்சிகள் குறித்து கவனமாக இருக்குமாறு அவர் மற்ற பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்