கனேடிய பிரதமரின் போலிப் புருவம்: இணையத்தில் பலரது கவனத்தை ஈர்க்கும் வீடியோ

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோவின் புருவம் போலியானதா என்ற விவாதம் இணையத்தில் களைகட்டியுள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ ஜி7 உச்சி மாநாட்டின்போது சர்வதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவரது இடது பக்க புருவம் சிறிதளவு நகர்ந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கனேடிய பிரதமரின் புருவமானது போலியாக இருக்கலாம் என வதந்திகள் கிளம்பியுள்ளது.

இருப்பினும் அவர் தொடர்ந்து தமது உரையை நிகழ்த்தி வந்துள்ளார். இதேவேளையில் கனேடிய பிரதமரை மிகவும் பலவீனமானவர் மற்றும் நேர்மையற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமரின் புருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்க்க, டிரம்ப் ஆதரவாளர்கள் பலர், நிஜமாகவே ஜஸ்டின் ட்ரூடியோ அரசியல் களத்தில் இருந்து தவறிச் செல்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் கனேடிய மக்கள் இவரை விடவும் சிறந்த ஒரு பிரதமரை தெரிவு செய்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் கனேடிய பிரதமரின் புருவம் போலியல்ல, அவரை சூழ்ந்திருந்த ஊடக கமராக்களின் வெளிச்சத்தால் அவரது புருவம் வித்தியாசமாக காணப்பட்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்