கனடிய பிரதமரை மோசமாக விமர்சித்த டிரம்ப்: பதிலடி கொடுத்த கனடா வாழ் தமிழர்கள்

Report Print Raju Raju in கனடா
522Shares
522Shares
lankasrimarket.com

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டொனால்டு டிரம்பிற்கு கனடா வாழ் தமிழர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

ஜி7 மாநாட்டில் கனடா நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடா பிரதமர் ட்ரூடோவை, நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ட்ரூடோ, கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால் எப்படி வேண்டுமானாலும் எங்களை நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்பின் விமர்சனத்துக்கு கனடா வாழ் தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கனடாவின் கால்கரியில் வசிக்கும் சுப்பிரமணி கூறுகையில், டிரம்புக்கு வயதாயிற்றே தவிர்த்து பேச்சில் முதிர்ச்சி இல்லை. கோட்பாட்டில் வேறுபாடு இருக்கலாம்.

அதை பகிரங்கமாகவும் கூறலாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

எட்மண்டனில் இருந்து புஷ்பா என்பவர், இந்த மாதிரி நான் பேசினால் என் அம்மாவிடமிருந்து அடி கிடைத்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் கூறியுள்ளார். அப்படி தான் எனக்கும் தோன்றுகிறது என்றார்.

டிரம்ப் இந்த மாதிரி பேசி, பேசிதான் பிரபலம் ஆகியிக்கிறார். ஆனால் இது கொஞ்சம் ஓவர்தான் என செபாஸ்டியன் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்