நீர்வீழ்ச்சியை பின்தொடர்ந்து நடைப் பயணம் சென்ற இளைஞர் பலி

Report Print Balamanuvelan in கனடா
81Shares
81Shares
lankasrimarket.com

கனடாவில் Eagle Ridge பகுதியில் நடைப் பயணம் சென்ற இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சி ஒன்றைப் பின்தொடர எடுத்த முடிவு அவர்களில் ஒருவரின் உயிரைப் பறித்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடைப்பயணம் செல்ல முடிவு செய்த இரு இளைஞர்கள், Buntzen ஏரிக்கு அருகில் செல்லும்போது வழி தவறினர்.

நீர்வீழ்ச்சி ஒன்றைக் கண்ட அவர்கள் அதைப் பின்பற்றிச் சென்று வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

அப்படி செல்லும்போது அவர்களில் ஒருவர் ஒரு பெரிய சரிவில் வழுக்கி விழுந்திருக்கிறார்.

இதற்கிடையில் ஹெலிகொப்டர் உதவியுடன் காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் சென்று பார்க்கும்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதைக் கண்டனர்.

அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த இன்னொருவரை மீட்ட மீட்புக் குழுவினர் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோல் நடைப்பயணம் செய்பவர்கள் தங்களுடன் போதுமான உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தும் மீட்புக் குழுவினர், நீர்வீழ்ச்சியைத் தொடர்ந்து செல்வது நல்ல யோசனை அல்ல என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்