பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா பின்வாங்காது: அமைச்சர் அதிரடி

Report Print Raju Raju in கனடா
164Shares
164Shares
lankasrimarket.com

எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒரு போதும் பின்வாங்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிக்க 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான உதவிகள் செய்யப்படும் என்றும் அந்நாடு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

16.6 பில்லியன் கனடா டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் யூலை 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த நடவடிக்கையானது வேறு வழியில்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீல்லாண்ட் கூறியுள்ளார்.

கனடாவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களை குறிவைத்தே இருக்கின்றன.

தங்களின் இந்த அணுகுமுறை நிலைமையை தீவிரமாக்காது, ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று ஃப்ரீல்லாண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்