பர்தா அணிய தடை விதியுங்கள்: இஸ்லாமிய பெண்ணின் வித்தியாசமான கோரிக்கை

Report Print Balamanuvelan in கனடா
306Shares
306Shares
lankasrimarket.com

கனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி அரேபிய பெண்ணொருவர் பர்தா அணிய தடை விதிக்குமாறு கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தில் ப்ளாக் ஒன்றில் புரட்சிகர கருத்துக்களை எழுதி வந்ததால் சவுதி அரேபிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் Raif Badawiயின் மனைவியான Ensaf Haidar தனது மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் தஞ்சம் புகுந்தார்.

கனடா தினமாகிய நேற்று அவர்கள் மூவருக்கும் கனடா குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், பர்தா அணிய தடை விதிக்குமாறு அவர் கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கனடா குடிமகளாகியுள்ள முதல் நாளில் தான் இஸ்லாமிய சட்டமாகிய Shariaவுக்கு கீழ்ப்படிய கட்டாயப்படுத்தப்படும் பெண்களின் துரதிர்ஷ்ட நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாக Ensaf Haidar தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், மனித உரிமைகளே இல்லாத சவுதி அரேபியாவில் பிறந்த கனடா நாட்டவளாகிய நான், பெண்களை வெறுக்கும் ஆண்கள், எந்த உரிமைகளும் இல்லாத வலிமையற்ற பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தேன்.

ஒரு அகதியாக கனடாவில் வாழ்ந்தபோது தங்கள் எல்லையைக் குறிக்கும் நோக்கில் இஸ்லாமியக் குழுக்கள் பெண்களை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவதைக் கவனித்தேன். இஸ்லாமில் எங்குமே ஒரு பெண் தன் முகத்தை மூடவேண்டும் என கூறப்படவில்லை.

இது பெண்களை மிருகங்களாகவும் ஆணின் சொத்தாகவும் நடத்தி அவர்களை மனிதத்துவமின்றி அடிமைகளுக்கு ஒத்த உடை உடுத்தச் செய்த, பெண்களை வெறுக்கும் இடைக்காலத்தைச் சேர்ந்த ஆண்களின் செயலாகும்.

இந்த காரணத்துக்காகத்தான் கனடா குடிமகளாக ஆகிய முதல் நாள் ஒண்டாரியோவில் பர்தாவை தடை செய்யும் விடயத்தை முன்வைத்துள்ளேன்.

அரசு எனது கோரிக்கையை ஏற்று நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன் என Ensaf Haidar தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்