போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயற்சித்தவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Kavitha in கனடா
292Shares
292Shares
lankasrimarket.com

சென்னை விமான நிலையத்தில் நேற்று போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற குஜராத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் வழக்கம்போல் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணிகளிடம் பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஜெர்மனி வழியாக கனடாவிற்கு செல்ல உள்ளதாக கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 19 பேர் தங்களது பாஸ்போர்ட்டை காட்டியுள்ளனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது, பின்னர் அவர்களின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பொலிசார் விசாரணையில் அவர்களில் 19 பேரும் நடனக் கலைஞர்கள் என்றும் கனடா நாட்டில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவும் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி கலைநிகழ்ச்சிக்கான ஆவணங்களையும் அழைப்பிதழையும் பொலிசார் கேட்டபோது, அவர்கள் மழுப்பலாக பதில் அளித்ததாகவும் 19 பேரும் தலா ஒரு லட்ச ரூபாய் கொடுத்து போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கியதாக கூறியுள்ளார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்கள் முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய கும்பலை குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்