கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலினால் 6 பேர் பலி

Report Print Kavitha in கனடா
118Shares
118Shares
lankasrimarket.com

கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் கடும் வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக இதுவரை 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப்பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

மேலும் இந்த வெப்பநிலை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி வெப்பநிலை நீடித்து வருவதனால் காட்டுத்தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்பம் காரணமாக தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்