இளைஞர் குத்தி கொல்லப்பட்ட வழக்கு: 17 வயது சிறுவன் கைது

Report Print Raju Raju in கனடா
99Shares
99Shares
lankasrimarket.com

கனடாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Mississauga நகரை சேர்ந்த டேனியல் ஸ்மித் (19) என்ற இளைஞர் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நிலையில் அங்கு நடந்த சண்டையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு பேரை பொலிசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் 17 வயதான முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் Saskatchewan மாகாணத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் அவரை சமர்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்