கனடா துப்பாக்கி சூடு நடத்தியவர் புலம்பெயர்ந்தவர்: சம்பவத்துக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு

Report Print Raju Raju in கனடா
264Shares
264Shares
lankasrimarket.com

கனடாவின் டொரண்டோவில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

டான்போர்த் சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 18 வயது பெண்ணும், 10 வயது சிறுமியும் உயிரிழந்ததோடு, 13 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய பைசல் ஹூசைன் என்ற நபர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

ஹூசைன் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் எனவும், அவரது பெற்றோர்கள் அங்கிருந்து கனடாவில் குடியேறியவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டுள்ளது.

இது தொடர்பாக இயக்கத்தின் செய்தி நிறுவனமான அமக் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு நடத்திய ஹூசன் ஐ.எஸ் உறுப்பினர் ஆவார்.

சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2014 முதல் ஐஎஸ் படைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் கூட்டணி நாடுகளின் மக்கள் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் பைசல் ஹூசன் துப்பாக்கி சூடு நடத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பைசல் ஹூசன் மன நோயாளி என அவர் குடும்பத்தார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்