உலகை திரும்பி பார்க்க வைத்த அழகிய இளம் பெண்: செய்த சாதனை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா
340Shares
340Shares
lankasrimarket.com

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச பாலே நடன போட்டியில் கனடாவை சேர்ந்த பெண் போட்டியாளர் முதல் பரிசை வென்றுள்ளார்.

வர்னா நகரில் 28வது சர்வதேச பாலே போட்டிகள் நடைபெற்றது.

இதில் 34 நாடுகளை சேர்ந்த 120 பாலே நடன கலைஞர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கனடாவை சேர்ந்த Yuan Zhe Zi Xuan என்ற பெண் போட்டியாளர் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார்.

அவருடன் சேர்ந்து சீனாவை சேர்ந்த Sinuo Chang என்ற பாலே கலைஞர் முதல் பரிசை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வர்னா நகரில் சர்வதேச பாலே போட்டிகள் கடந்த 1964 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்