கனடா காட்டிற்குள் சுற்றித்திரியும் வினோத உருவம்: அச்சத்தில் பொதுமக்கள்.. வீடியோ!

Report Print Vijay Amburore in கனடா
325Shares
325Shares
lankasrimarket.com

கனடாவில் கோரமான தோற்றத்துடன் வினோத உருவம் ஒன்று சுற்றி திரியும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனடாவின் Quebec பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பள்ளத்தாக்கு ஒன்றில், 6 அடி உயரம் கொண்ட வினோத உருவம் ஒன்று சுற்றி திறந்துள்ளது. இதனை Audree Frechette என்ற நபர் படம்பிடித்துள்ளார்.

அந்த வீடியோவில், புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமையை தாக்குவதற்கு ஆயத்தமாவதை போல அந்த வினோத உருவம் காத்துக்கொண்டிருக்கிறது. இறுதியில் அந்த காட்டெருமையை அந்த வினோதம் நெருங்க முற்படுவதை போல அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொளி யூடியூப் தளத்தில் வெளியானத்திலிருந்து பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வினோத உருவம் Lord of the Rings படத்தில் வரும் ghoul போன்று இருப்பதாகவே கூறுகின்றனர்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து பொதுமக்கள் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்