கனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்

Report Print Kavitha in கனடா
251Shares
251Shares
lankasrimarket.com

கனடாவில் வசித்து வந்த சீக்கியர் ஒருவர் திட்டமிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சீக்கியரான ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19) என்றவர் குடும்பத்துடன் திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து தனது வயதையொத்த நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தகவலறிந்து வந்த பொலிசார் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர், மேலும் படுகாயம் அடைந்த அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அங்கு ககன்தீப் சிங் தாலிவாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அப்போட்ஸ்போர்ட் பொலிஸ் துறையினர் குறிப்பிடுகையில்,

“சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்தது. அங்கு 2 பேர் சுடப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் நடந்து உள்ளது. தாலிவாலைத்தான் குறிவைத்து உள்ளனர் என்று தெரிகிறது” என்றனர்.

ககன்தீப்சிங் தாலிவால் குடும்ப நண்பர் ஜாஸ்கர்ன் சிங் தாலிவால், “எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. யாரோ வந்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்