கடலில் சிறுமியுடன் மகிழ்ச்சியாக குளித்த சிறுவன்: இறுதியில் நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா
532Shares
532Shares
lankasrimarket.com

கனடாவில் நான்கு பேர் கடலில் மூழ்கி பின்னர் மீட்பு படையினரால் மீட்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

டொரண்டோவில் உள்ள உட்பைன் கடற்கரையில் 15 வயது சிறுமி,16 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் குளித்த போது மூழ்கியுள்ளனர்.

இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இதில் நால்வரும் மீட்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவரான 16 சிறுவன் உயிரிழந்தான், மற்ற இருவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையில், கனடாவில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பொழிவதால் சில கடற்கரைகளில் நீச்சல் அடிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்