அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் சசித்திட்டம்: கனேடிய இளைஞன் மீது குற்றச்சாட்டு

Report Print Thayalan Thayalan in கனடா
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் சசித்திட்டம்: கனேடிய இளைஞன் மீது குற்றச்சாட்டு
61Shares
61Shares
lankasrimarket.com

கனடாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கம் மற்றும் சுரங்கப்பாதை உள்ளிட்ட நாட்டின் பல அடையாளச் சின்னங்களை இலக்குவைத்த ஐ.எஸ் பங்கரவாதிகளின் சதித்திட்டத்துடன் குறித்த இளைஞனுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் எல் பஹ்னாசாவ் என்ற இளைஞன் மீதே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோ மிசிசாகாவைச் சேர்ந்த இந்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நியூஜெர்சியில், கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ரஹ்மான் எல் பஹ்னாசாவின் கைது விபரம் நேற்றையதினமே முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மான் எல் பஹ்னாசா உட்பட கைது செய்யப்பட்டிருந்த மூவர் மீதான குற்றச்சாட்டுக்களை அமெரிக்க மத்திய நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த நிலையில் ரஹ்மான் எல் பஹ்னாசாவின் கைது விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் காலத்தில் நியூயோர்க் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்துவதங்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதற்காக மேற்குறித்த மூவரும் இணையவழி தகவல்கள் ஊடாக தொடர்பு கொண்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப ரஹ்மான் எல் பஹ்னாசாவ் கனடாவில் குண்டு தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹ்மான் எல் பஹ்னாசாவ் மீது, பேரழிவு ஆயுத பாவனை, சதித்திட்டம், தேசிய எல்லையை கடந்து பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகன்றது.

இவர்மீதான தண்டனை விபரம் எதிர்வரும் டிசம்பால் 12 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இவ்வாறிருக்க பஹ்னாசாவ்வின் கைதுக்கு வழிவகுத்த எவ்.பி.ஐ. விசாரணைகளுக்கு கனேடிய பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்