கமல் மனுஷனே இல்ல? பிரம்மாண்ட இயக்குநர் தடாலடி பேச்சு

Report Print Aravinth in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரம்மாண்ட படங்களின் இயக்குநரான ஷங்கர் தற்போது நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இவர் எப்பொழுதுமே மனதில் படும் விடயங்களை எந்த இடம் என்று பார்க்காமல் தைரியமாகவும், பளிச்சென்றும் போட்டு உடைத்து விடுவார்.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேட்டி ஒன்றில் ரஜினி கமல் குறித்து தடாலடியாக பேசியிருக்கிறார்.

முதலிம் பேட்டி எடுப்பவர் நடிகர் கமல் குறித்து ஷங்கரிடம் கேட்க, கமலா அவர் மனிதனே அல்ல என சட்டென்று கூறியிருக்கிறார்.

அப்போது, நிகழ்ச்சியில் பேட்டி எடுப்பவர் வாயடைத்து போக சறி இடைவெளி விட்டு ஆமாம், கமல் ஷூட்டிங் ஸ்பாட் வரும் வரை ரொம்ப சாதாரணமாக சிரித்து கேலிக் கிண்டல் செய்துக் கொண்டிருப்பார்.

ஆனால், மேக்கப் போட்ட அடுத்த கணத்தில் இருந்து அவர் வேறு ஒரு லெவலுக்கு போய் விடுவார்.

கமல் சார்..கமல் சார் என்று கூப்பிட்டால் கூட அவர் காதில் கேட்காது, நடிப்பு மட்டுமே அவர் கவனத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பின்பு, ரஜினி குறித்து கேட்டபோது, சாதரணமாக அவர் நடிகரே இல்லை, ஷெட்டில் எப்போ பார்த்தாலும் கூலாக உட்கார்ந்தபடி யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருப்பார்.

ஆனால், எப்போது நடித்துப் பார்த்தார் வசனம் எப்போது பேசிப் பழகினார் என்றே தெரியாது.

கமெரா முன்பு வந்ததும் வெரைட்டி வெரைட்டியாக அசத்தி விடுவார் என்றும் இருவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments