ஜெயலலிதாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல மனிதரின் மரணத்தில் மர்மம்!

Report Print Raju Raju in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

இரு தினங்களுக்கு முன்னர் காலமான பிரபல பாலிவுட் நடிகர் ஓம்பூரி இயற்கையாக மரணிக்கவில்லை என்ற விடயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்பூரி (66) கார்டியாக் அரெஸ்ட் என்னும் இதயநோய் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனை முடிந்து வெளிவந்த அறிக்கையில், அவர் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கேற்றவாறு மும்பை பொலிசார் ஓம்பூரி மரணத்தை ஆக்ஸிடெண்டல் மரணம் என்றே பதிவு செய்துள்ளனர்.

இதனால் இவர் உண்மையிலேயே இயற்கையாக தான் மரணம் அடைந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments