ஆஸ்கர் விருது வென்ற மற்றொரு கோவை இளைஞர்

Report Print Fathima Fathima in சினிமா
0Shares
0Shares
Cineulagam.com

தொழில்நுட்ப பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவை சேர்ந்த இளைஞர் கிரண் பட்டுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த கிரண் பட், அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு 2017ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் Pirates of the Caribbean, Teenage Mutant Ninja Turtle, Warcraft, Star Wars Episode VII மற்றும் Star Wars Rogue One போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்தாண்டு கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments