தனுஷ் எங்க பையன் தான்...ஆதாரங்கள் உள்ளது!

Report Print Fathima Fathima in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்களை வழங்க தயார் என சிவகங்கையை சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்- மீனாட்சி, இவர்கள் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

advertisement

இதற்கு பதிலளித்த தனுஷ் தரப்பு, அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்க கோரி கதிரேசன்- மீனாட்சி தம்பதிக்கு உத்தரவிடப்பட்டது, இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பதில் மனுவில் எந்த வித ஆதாரமும், ஆவணங்களும் இல்லை.

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அவர் பிறந்ததாகவும், சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாகவும், தனது இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும் அவர் கூறியிருப்பது பொய்.

அவர் எங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. உறவினர்களும் வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளார்கள்.

அவருடைய சிறுவயது நண்பர்களும் சாட்சி சொல்வார்கள். எழும்பூர் மருத்துவமனையில் பிறந்ததாக அவர் தாக்கல் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ் பொய்யானது.

அவரை நாங்கள் இங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம்.

பின்னர் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை-சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்தோம்.

அங்கு விடுதியில் தங்கியிருந்து ஒரு மாதம் மட்டும் படித்த அவர், பின்னர் சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போது நாங்கள் தான் அவருடைய உண்மையான பெற்றோர் என்று தனுஷே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துள்ளார்.

எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாததால் தான் பராமரிப்புத் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தோம்.

எனவே எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கவும், அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments