என்னை வைத்து யாரும் படம் எடுக்க வேண்டாம்: நடிகர் சத்யராஜ் அதிரடி

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasri.com

பிரபல திரைப்பட நடிகரான சத்யராஜ் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் மனப்பூர்வமாக வருத்தம் கோருகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், காவிரி பிரச்சனையில் கருத்து தெரிவித்ததற்கு, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் 9 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது யாரையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்

நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

9ஆண்டுகளுக்கு பின்னர் மனப்பூர்வமாக வருத்தம் கோருகிறேன். நான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

காவிரி உள்பட தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன், நடிகனாக இருப்பதைவிட தமிழனாக இருப்பதே பெருமை.

பாகுபலி என்ற பெரிய படத்தின் சிறிய தொழிலாளி நான், என் காரணமாக பாகுபலி திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

என்னால் பிரச்னை ஏற்படும் என்று கருதினால், படம் எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என நினைத்தால் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம்.

என்னுடைய உதவியாளரின் தாய்மொழி கன்னடமே, உணர்வுகளை புரிந்துகொண்டு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments