பிக்பாஸ் நிகழ்ச்சி..கண்ணீர் விட்டு அழுத ஜுலி: பொய் என கூறிய ஆர்த்தி

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல தனியார் தொலைக் காட்சி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலர் பங்கு பெற்ற போதும், சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டவர் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜூலி தான்.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தின் போது நடிகை ஓவியா ஜுலியின் குடும்பத்தைப் பற்றி கேட்டார். அப்போது ஜூலி தான் மருத்துவராக விருப்பப்பட்டதாகவும், வசதியின்மையால் நர்சாக மாறியதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து வெளிநாட்டை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏஜென்டிடம் ரூபாய் 3 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டதாக கூறி அழுதாகவும், இதை தெரிந்த அறிந்த அவரது தந்தை, பணம் போனால் பரவாயில்லை நீ திரும்பி வா என்று ஆறுதல் கூறியதாகவும், அடுத்த நாளே ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கண்ட நடிகை ஆர்த்தி, கிண்டலாக ஜுலி கூறுவது பொய் என்று கூறி, அங்கிருந்த கேமராவை நோக்கி சைகை காட்டியுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments