யாராலும் அடக்க முடியாத கொம்பன் காளை: நடிகர் விஜய்சேதுபதிக்கு நோட்டீஸ்

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasri.com

பிரபல திரைப்பட நடிகரான விஜய்சேதுபதிக்கு திருச்சி லால்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் கருப்பன் என்ற திரைப்படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது சமூகவலைத்தளங்களிலும் வைரலானது.

இந்நிலையில் தமிழகத்தின் திருச்சி லால்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவர், யாராலும் அடக்க முடியாத கொம்பன் என்கிற தங்களது காளை மாட்டை கருப்பன் திரைப்படத்தில் அடக்குவது போல் கிராபிக்ஸ் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் படத்தின் போஸ்டரை தான் பார்த்ததாகவும், அதில் அவர் ஒரு காளையை அடக்குவது போல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி அடக்குவது போல் இருக்கும் காளை தனக்கு சொந்தமான காளை எனவும், தங்கள் காளை களத்தில் ஓடிய போது எடுத்த புகைப்படத்தை விஜய்சேதுபதியுடன் இணைத்து கிராபிக்ஸ் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் இது குறித்து விளக்கம் அளிக்கும் படி விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments