பிரபல நடிகர் பீலி சிவம் மரணம்

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
Seylon Bank Promotion

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் சற்றுமுன் மதுரையில் காலமானார்.

பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 60 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு, 1955-ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியது.

இதையடுத்து தூரத்து இடி முழக்கம் படம் மூலம் அறிமுகமான பீலி சிவம், முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் அதன் பின் சின்னத்திரையிலும் வலம் வந்தார்.

குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர், கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

பீலிசிவம் 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்