முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவியை கௌரவித்த வடக்கு முதல்வர்

Report Print Mohan Mohan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆசிய நாடுகளுக்குகிடையிலான பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பிடித்து முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றது. கலைமகள் விளையாட்டுக்கழகம் மற்றும் செல்லபுரம் கமக்கார அமைப்பு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவி தேவராசா தர்சிகா மற்றும் அவருக்கு பயிற்சியளித்த ஆசிரியர் பத்மநாதன் பிரதீபன் ஆகியோரை கௌரவித்துள்ளார்.

இதேவேளை, தேவராசா தர்சிகா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்