போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கவன ஈர்ப்பிற்காக வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

Report Print Kumar in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு, திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியாலய மாணவர்களால் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மாபெரும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த பாடசாலையில் இரண்டாம் கட்ட செயல்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய அதிபர் வி.குணசீலன் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கவன ஈர்ப்பு பேரணி இடம்பெற்றதுடன், வீதி நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கவன ஈர்ப்பு பேரணியானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி நாவலடி - திராய்மடு கிராமங்களின் பிரதான வீதி ஊடாக சென்று மீண்டும் பாடசாலையை அடைந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் எ.ஜெகநாதன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்