வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சீருடையில் மாற்றம்: பெற்றோர் விசனம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலை அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது பாடசாலை அதிபரினால் மாணவிகளின் சீருடையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அபிப்பிராயம் கோரப்பட்டிருந்தது.

இந் நடைமுறைக்கு பல பெற்றோர் அமைதி காத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் இச் சீருடை மாற்றம் தொடர்பில் அறியாத சில பெற்றோர் இச் செயற்பாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இச் சீருடையில் கொண்டு வரப்படவுள்ள மாற்றம் வவுனியா பிரபல வர்த்தகர் ஒருவர் பாடசாலையின் நிர்வாகத்தின் மீது தாக்கம் செலுத்தியமையே காரணம் என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய பாடசாலைகள் போன்று இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு சீருடைக்கு மேலதிகமாக முழு நீள காற்சட்டை அணிய வேண்டுமா என்ற வாதப் பிரதிவாதங்கள் பெற்றோர் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்