வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை நிர்வாகம் தொடர்பில் பெற்றோர் விசனம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

வவுனியாவில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் மாணவியை, அந்த பாடசாலையின் மாணவ தலைவி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இருந்து பாடசாலை முடிவடைந்து வீடு நோக்கி நடந்து சென்ற 9ஆம் வகுப்பு மாணவியை அதே பாடசாலையின் மாணவ தலைவியொருவர் வேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் குறித்த மாணவி கால் முறிந்து, படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலைக்கு மாணவிகள் மோட்டர் சைக்கிளில் வருவது தொடர்பாக பலர் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், பாடசாலை நிர்வாகம் அது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், மாணவிகள் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் வருவதற்கும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து மாணவியொருவர் வீடு நோக்கி சென்றபோது பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவ தலைவி, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார்.

இதன் போது நடந்துசொன்ற மாணவி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவ தலைவி தனது மோட்டார் சைக்கிளை எடுத்து அவ்விடத்தில் இருந்து மீண்டும் வேகமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதியொருவருமாக முதலுதவியளித்த பின்னர் பாடசாலை அதிபரிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த பாடசாலையின் அதிபர் தமது பாடசாலைக்கு எவரும் மோட்டார் சைக்கிளில் வருவதில்லை என தெரிவித்தாக முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்தார்.

எனினும் பாடசாலையில் உள்ள பாதுகாப்பு கமராவில் பார்க்குமாறு தெரிவித்தபோதிலும் அதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்த மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

“பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர். அரசாங்கம் சாரதி அனுதிப்பத்திரம் வழங்குகின்றது. நாம் என்ன செய்வது” என பொறுப்பற்றவிதத்தில் பாடசாலை நிர்வாகம் பதிலளித்ததாக காயமடைந்த மாணவியின் பெற்றொர் தெரிவித்துள்ளனர்.

தமது மகள் இரண்டு மாதங்களுக்கு நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக அதிபர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பதுடன், ஏனைய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாக பெற்றோர் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்