இலங்கை வீரர்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழர்கள்

Report Print Nivetha in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸ்லாந்தில் சென்ட் காலன் (ST.Gallen) நகரில் நடைபெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போட்டியில் ( Cross Country Championship) பங்கு பற்றிய இலங்கை பல்கலைக்கழக மாணவர்களையும், வழிநடத்திய பல்கலைக்கழக இருவிரிவுரையாளர்களையும் சூரிச் விமானநிலையத்தில் சந்தித்து முனைப்பு, உதயம் நிர்வாகத்தினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

சூரிச் விமானநிலையத்திற்குச் இன்று சென்ற முனைப்பு, உதயம் நிர்வாகத்தினர் வீரர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்வதற்காக, கோவிந்தராஜா கோகுலநாதன் -மட்டக்களப்பு (கிழக்குப் பல்கலைக்கழகம்) மதுசாங் பண்டார- வெலிமடை (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) நளின் பண்டாரவீரசிங்க - கங்குராங்கெத்த (களனி பல்கலைக்கழகம்) சிவகுமார் நிர்மல் - கிளிநொச்சி (யாழ். பல்கலைக்கழகம் )ஆகிய மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்களுக்கு வழிகாட்டிகளாக சமரகுமார குணவர்த்தன (தலைவர் விளையாட்டுத்துறை களனி பல்கலைக்கழகம்) லலித்றோகன (பணிப்பாளர் விளையாட்டுத்துறை சப்ரகமுவ பல்கலைக்கழகம்) ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதேவேளை, உலகத்திலுள்ள பல நாடுகளிலிருந்தும் தொகையான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் வட, கிழக்கைச் சேர்ந்த இருமாணவர்களும் பங்கு பற்றியுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்