இலங்கையின் பொருளாதார பலத்தை அதிகரிக்கும் நோக்கில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் பத்திரங்கள் சர்வதேச ரீதியில் வௌியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் வௌியிடப்பட்ட குறித்த கடன் பத்திரங்கள் ஐந்து மற்றும் பத்து வருட கால முதிர்ச்சி காலத்தைக் கொண்டுள்ளன.
அதன் பிரகாரம் 2023 ஏப்ரல் 18 மற்றும் 2028 ஏப்ரல் 18 ஆகிய தினங்களில் இவை முதிர்ச்சியடையவுள்ளதுடன் வருடாந்தம் 8 வீதம் வரையான வட்டித் தொகை இவற்றுக்கு வழங்கப்படவுள்ளது.
கடன் பத்திரங்கள் வௌியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே சர்வதேச சந்தையில் அவை விற்று தீர்ந்துள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையே அதன் மூலம் புலப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடன் பத்திரங்கள் விற்பனையின் தரகர்களாக இலங்கையின் முக்கிய தனியார் வங்கிகள் செயற்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.