வடக்கில் பாடசாலை மற்றும் சமூக நூலகங்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு

Report Print Sumi in சமூகம்
41Shares
41Shares
lankasrimarket.com

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வட மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு வட மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் இன்று காலை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

இதில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த நூல்களை வழங்கி வைத்தனர்.

இதன்படி வட மாகாணத்திலுள்ள 70 பாடசாலைகள் மற்றும் 45 சமூக நூலகங்களுக்கு சகல துறைகளையும் உள்ளடக்கிய நூல் தொகுதி வழங்கப்பட்டன.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சுஜன் நாணயக்கார, வட மாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்