வடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா வவுனியாவில்

Report Print Theesan in சமூகம்
96Shares
96Shares
lankasrimarket.com

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.

வவுனியா நகரசபை மைதானத்தில் பொலிஸ் மா அதிபரின் வழிநடத்தலில் குறித்த விழா நடைபெற்றுள்ளது.

இவ் விளையாட்டுப் போட்டியில் வட மாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் டிவிசனை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும், 19ஆம் திகதி 6 பொலிஸ் டிவிசனைச்சேர்ந்த பொலிஸாரின் அணிவகுப்பும் நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்