மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Report Print Kumar in சமூகம்
153Shares
153Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், பூர்த்திசெய்யப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இப்ராலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதாதாரஅமைச்சர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சுகாதாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீண்ட காலத்திற்கு பின்னர் மிகப்பெரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

இதன்போது இருதயநோய் சிகிச்பை பிரிவு, சிறுநீரக சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

இந்த அபிவிருத்த திட்டங்கள் சுமார் 810 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்