அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா

Report Print Nesan Nesan in சமூகம்
64Shares
64Shares
lankasrimarket.com

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இரத்த வங்கி கட்டட திறப்பு விழாவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில், பிரதியமைச்சர் ஹரீஸின் அழைப்பின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், கல்முனை மக்களின் ஆதரவுடன் தங்கப்பதக்கமும் அத்தோடு வைத்தியசாலை சார்பாக நினைவுப்பரிசில்களும் வைத்திய அத்தியட்சகரினால் அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிகழ்வின்போது, பிரதி அமைச்சர் பைசால் காசிம், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்