மன்னாரில் 2வது நாளாகவும் தொடர்கிறது வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

Report Print Ashik in சமூகம்
49Shares
49Shares
lankasrimarket.com

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசாங்கத்திடம் இருந்து அல்லது அரசியல் வாதிகளிடம் இருந்து தங்களுக்கு எந்த விதமான சாதகமான பதிலும் இது வரை கிடைக்காமையினால் தொடர்ச்சியாக தாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று புள்ளியின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் முறையை கைவிட்டு வயதின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தும் வரை தங்கள் போரட்டம் பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக இடம் பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அரசாங்கம் எங்கள் போரட்டங்களை தடுப்பதை விடுத்து அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது பெறுத்தமாக இருக்கும் எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்