உள்ளுராட்சிமன்ற சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை

Report Print Kumar in சமூகம்
32Shares
32Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சிமன்ற சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது.

குறித்த பயிற்சிப்பட்டறை இன்று காலை கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் மட்டக்களப்பு கோப்பின் விடுதியில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது.

நீண்ட காலத்திற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் மக்கள் சபை இயங்குவதன் காரணமாக அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையினை மக்கள் பிரதிநிதிகள் ஊடாக பெற்றுக்கொடுக்கும் வகையில் இவ்வாறான பயிற்சிகளை கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியம் நடத்தி வருகின்றது.

இந்த பயிற்சி பட்டறையில் கோறளைப்பற்று வடக்கு ,மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை ஆகியவற்றில் தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப்பெற்றன.

இந்த நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி கு.ஐங்கரன் கலந்து கருத்துரைகளை வழங்கியதுடன், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் திட்டமுகாமையாளர் ஜெரினா றாபீக்,திட்ட உத்தியோகத்தர்களான வி.தயாநிதி,எம்.விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த செயலமர்வின்போது உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளின்போது செல்வாக்கு செலுத்தும் சட்ட நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகளும், விளக்கங்களும் வழங்கப்பட்டன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்