கொழும்பு - வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Murali Murali in சமூகம்
891Shares
891Shares
lankasrimarket.com

அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தவேலையின் காரணமாக நாளை(7) காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியால காலப்பகுதிக்கு பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கோட்டை மாநகரசபை எல்லைப்பிரதேசத்திலும் கொழும்பு 5 பிரதேசத்திலும் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதேபோன்று, கொழும்பு 4, 6, 7, 8 ஆகிய பிரதேசங்களிலும் மகரஹம மற்றும் பொறலஸ்கமுவ எல்லைப்பிரதேசங்களிலும் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும்.

இதனால் நீர்பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேவையான நீரை முன்கூட்டியே சேகரித்துவைக்குமாறு சபை பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்