ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
45Shares
45Shares
lankasrimarket.com

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியின் முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, எங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் இல்லை.உடனடியாக ஆசிரியர்களை நியமியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை கையில் ஏந்தியுள்ளனர்.

எல்லோருக்கும் கிடைக்கின்ற பொதுவான கல்வி எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பல தடவைகள் நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபால கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்