இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்கள் எப்போது தயாராகின்றது என்று தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasri.com

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளின் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் தனது கைப்பேசிகளை நேரடியாகவே தயாரிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கணவே தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக சில ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து தனது புதிய ஐபோன்களை இந்தியாவிலேயே தயாரிக்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.

அத்துடன் தாய்வானின் Wistron Corp நிறுவனத்தினையும் தனது புதிய கைப்பேசி தயாரிப்பில் இணைத்துக்கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்த தகவலை கர்நாடகாவின் தொழில்நுட்பத் துறை அமைச்சரான Mallikarjun Kharge உம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments