இமாலய சாதனை படைத்த ஆப்பிள் மியூசிக் சேவை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்வதை தாண்டியும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இவற்றுள் ஆப்பிள் மியூசிக் எனும் சேவையும் ஒன்றாகும். இச் சேவையின் ஊடாக ஒன்லைனில் பல்வேறு மொழிகளிலான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

பிரபல்யமான இச் சேவையினை பெறுவதற்காக இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கையானது கடந்த டிசம்பர் மாதத்தில் 20 மில்லியனை எட்டியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை சந்தாதாரர்களின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்கு முனைப்பு காட்டிவரும் ஆப்பிள் நிறுவனம் சில புதிய நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்யவுள்ளது.

அத்துடன் Carpool Karaoke எனும் புதிய நிகழ்ச்சி ஒன்றினையும் விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments