யாகூ நிறுவனத்தை கையகப்படுத்தியது Verizon நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஒரு காலத்தில் இணைய உலகினை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த யாகூ நிறுவனம் கூகுளின் வருகைக்கு பின்னர் மந்த நிலையை நோக்கி நகரத்தொடங்கியது.

மீண்டெழ முடியாமல் தவித்துக்கொண்டிருந்த யாகூ நிறுவனம் நஷ்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

advertisement

இதனால் அந்நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Verizon ஈடுபட்டு வந்தது.

இரு நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரு நிறுவனங்களும் தனது ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தி யாகூ நிறுவனத்தினை Verizon நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இதன் பின்னர் யாகூ நிறுவனத்தின் சொத்துக்களை தனது AOL வியாபார நிறுவனத்துடன் இணைத்து Oath எனும் புதிய நிறுவனத்தினை உருவாக்க Verizon தீர்மானித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments