பிரபல ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனத்தினை வாங்கும் கூகுள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

பல முன்னணி நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிறுவனங்களை கொள்வனவு செய்வது வழக்கமான ஒன்றாகும்.

பேஸ்புக் நிறுவனமும் சில நிறுவனங்களை கொள்வனவு செய்திருந்தது.

இந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனம் பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான HTC இனை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று முன்னர் Motorola நிறுவனத்தினை கொள்வனவு செய்த கூகுள் நிறுவனம் பின்னர் அதனை Lenova நிறுவனத்திடம் விற்பனை செய்திருந்தது.

ஆப்பிள் ஐபோன்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதவற்கு கூகுள் நிறுவனம் நீண்டகாலமாக முனைப்புக் காட்டி வருகின்றது.

எனினும் குறித்த முயற்சி இதுவரை பலிக்காத நிலையில் HTC நிறுவனத்தினை கையகப்படுத்தி ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விட தயாராகி வருவதாகவே பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கூகுள் நிறுவனமும் தற்போது கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்