இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் ஆலை அமைக்கப்படுமா?

Report Print Fathima Fathima in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஐபோன் ஆலை அமைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டிலேயே இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் சில சலுகைகளை எதிர்பார்க்கிறது, அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்பிள் நிறுவனம் வரி விதிப்பிலும், இந்தியாவில் தொழில் அமைக்கும் நிறுவனங்கள் 30 சதவிகித உதிரிபாகங்களை இந்தியாவில் வாங்க வேண்டும் என விதிமுறையிலும் சலுகை கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர விற்பனைக்கு பிந்தைய சேவைக்கும் 15 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்