மூன்று நிமிடங்களில் ரூ.10,000 கோடி: சாதனை படைத்த அலிபாபா

Report Print Fathima Fathima in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா மூன்று நிமிடங்களில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா Single Day என்னும் மெகா ஆன்லைன் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் நேற்று விற்பனை தொடங்கிய நிலையில், வெறும் மூன்று நிமிடங்களில் 10,000 கோடி ரூபாய் அளவில் விற்பனையாகியுள்ளன.

15 நிமிடங்களில் சுமார் 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகின.

இதில் 97 சதவிகித வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாக ஷாப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்